நிதி முகாமைப் பிரிவு
- தலைமை அலுவலத்திலும் தொழினுட்பக் கல்லூரிகள் தொடர்பாகவும் ஆண்டு மதிப்பீட்டினைத் தயாரித்தல்.
- தொழினுட்பக் கல்லூரிகளுக்கான ஆண்டு ஏற்பாடுகள், மாத அடிப்படையிலான ஒதுக்கீடு, செலவுகள் ஆகியவற்றை மீட்டாய்தல்
- திணைக்களத்தின் சம்பளம், கொடுப்பனவு என்பன தொடர்பான எல்லா அலுவல்களும்.
- உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் அலுவல்களை நடத்தல்.
- திறைசேரிக் கட்டுநிதியைப் பெறுதலும் அதனைத் தொழினுட்பக் கல்லூரிகளின் தேவைகளுக்கேற்ப விநியோகித்தலும்.
- கேள்விச் சபைகளை நியமிப்பதற்கான அலுவல்கள்.
- கணக்குப் பிரிவின் பொது நிர்வாகம்.
- ஆண்டுக் கணக்கு அறிக்கைகளைத் தயாரித்தல்.
- வரவுசெலவுத் திட்டப் பிரிவுக்கு மாத முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்.
- திணைக்களத்திற்குத் தேவையான மேலதிக ஏற்பாடுகளைப் பெறுவதற்கான அலுவல்கள்.
- அன்னியச் செயற்றிட்டங்கள் தொடர்பான நிதி அலுவல்கள்.