ஏனைய சேவைகள்
தேசியத் தொழில் தகைமைப் பாடநெறிகளைக் (NVQ) கற்கும் மாணவர்களுக்காகப் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவினாலும் உரிய தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பணிப்பாளர்களின் / அதிபர்களின் மேற்பார்வையின் கீழும் இயைபுபடுத்தலின் கீழும் மதிப்பீட்டாளர்களின் (Assessors) மூலம் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அவற்றின் பேறுகளின் பேரில் மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) மூலம் உரிய NVQ சான்றிதழ்கள் வழங்கப்படும்.
குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களுக்காக இறுதிப் பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ்த் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் நடத்தப்பட்டு, சித்தியடைந்த விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வேறு நிறுவகங்களில் சேவையாற்றும் சேவையாளர் குழுக்களுக்காக இத்திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேறபார்வையின் கீழ்ப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அப்பிரிவின் மூலம் பேறுகள் வழங்கப்படும்.
இத்திணைக்களத்தின் கீழ் உள்ள எல்லாத் தொழினுட்பவியல் கல்லூரிகளிலும் / தொழினுட்பக் கல்லூரிகளிலும் தொழில் வழிகாட்டல் அலுவலரின் கீழ்த் தொழில் வழிகாட்டல் அலகு நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் மூலம் பயிற்சிக்கு / தொழிலுக்கு வழிகாட்டப்படும் விருப்பமுள்ள இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த மாணவர்கள், பெற்றோர்கள், வயதுவந்தவர்கள், ஏனைய அரசாங்கத் துறைகளிலும் தொண்டர் அமையங்களிலும் உள்ள அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தலிலும் உகந்தவாறு அவ்வப் பிரசேதங்களில் நடத்தப்படும் கண்காட்சி அலுவல்களிலும் ஒத்துழைப்பை நல்கும்.
தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேரப் பாடநெறிகளைக் கற்று முடிக்கும் மாணவர்களுக்காகத் தொழிலில் ஈடுபடுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படும்.
தொழில் கல்வியைப் பூர்த்திசெய்த சான்றிதழை வைத்திருப்பவர்கள், சுய தொழிலை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் இளைஞர்கள், தற்போது சுய தொழிலை நடத்தும் இளைஞர்கள் ஆகியோருக்கான முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொழில் வழிகாட்டல் அலகின் மூலம் பின்வருமாறு நடத்தப்படும்.
தேர்ச்சி அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் மூலம் முயற்சி அபிவிருத்திக்குரிய அறிவுறுத்தல் கைந்நூல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விவரங்களுக்காகக் கிட்டிய தொழினுட்பவியல் கல்லூரியின் / தொழினுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் அலகுடன் தொடர்புகொள்க.
தொழில் பயிற்சியின் மூலம் அல்லது தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தற்போது பெற்றுள்ள தேர்ச்சிகளை மதிப்பீட்டிற்கு உட்படுத்தி (Recognition of Prior Learning – RPL) தேசியத் தொழில் தகைமைகள் (NVQ) சான்றிதழ்களை வழங்கல் இதன் நோக்கமாகும்.
சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை: