tcbeliatta@dtet.gov.lk

+94 4722 43 229

LOGO_HEADER
Department-Logo

மீள்பார்வை

அறிமுகம்

1893 ஆம் ஆண்டிலே மருதானையில் தொழினுட்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதுடன் இலங்கையில் தொழினுட்பக் கல்வி தாபிக்கப்பட்டது. 115 ஆண்டு வரலாறு உள்ள தொழினுட்பக் கல்வி இன்று வரைக்கும் இலங்கை பூராகவும் பல்வேறு பிரதேசங்களில் இருக்கும் 38 தொழினுட்பக் கல்லூரிகள் வரைக்கும் விருத்தியடைந்துள்ளது. இத்தொகுதியில் பூரண மதிப்பீட்டுக்குப் பின்னர் கைத்தொழில் அபிவிருத்திக்குப் பொருத்தமானவாறு பயிற்சிப் பாடநெறிகளை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஒரு மாகாணத்திற்கு ஒரு தொழினுட்பவியல் கல்லூரி வீதம் 9 தொழினுட்பக் கல்லூரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. தொழினுட்பக் கல்லூரியின் பணியிலக்கை அடையும் நோக்குடன் திணைக்களத்தின் பணிகளும் தொழினுட்பக் கல்லூரிகளின் நிகழ்ச்சித்திட்டங்களும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய பணிகள்

  • பாடசாலைக் கல்விக்குப் பின்னர் தொழினுட்பக் கல்விக்கு வழிப்படுத்தப்படும் இளைஞர்களுக்குத்   தொழினுட்பக் கல்வியையும் பயிற்சியையும் அளித்தல்
  • தற்போது தொழிலில் ஈடுபடுவர்களின் அறிவையும் திறன்களையும் வளர்ப்பதற்குப் பகுதி நேரப் பாடநெறிகளையும் வார இறுதிப் பாடநெறிகளையும் நடத்தல்
  • தொழினுட்பக் கல்வியினுள்ளும் பயிற்சி முறையினுள்ளும் தேசிய தொழில் தகைமைகளை அடிப்படையாய்க் கொண்டு பாடநெறிகளை நடத்தல்.
  • தொழினுட்பக் கல்வி, பயிற்சித் திணைக்களத்தில் பதிவுசெய்த பாடநெறிகளுக்காக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் இறுதிப் பரீட்சைகளை நடத்தல்
  • தொழினுட்பக் கல்லூரிகளில் பயிற்சியைப் பூர்த்திசெய்த இளைஞர்களைத் தொழில்களுக்கு வழிப்படுத்தல்
  • கைத்தொழில்களை இயைபுபடுத்தல், தொழில் வழிகாட்டல், முயற்சி அபிவிருத்தி ஆகியவற்றுக்காக உயிர்ப்பான நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்தல்
  • பயிற்சிபெறுநர்களுக்குப் பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
  • தொழினுட்ப, தொழினுட்பவியல் துறையின் முன்னேற்றத்திற்காக ஆய்வுகளை நடைமுறைப்படுத்தல்.
  • வினைத்திறன்மிக்க செயற்பாட்டிற்கும் பலன்தருதிறனை மேம்படுத்துவதற்கும் 38 தொழினுட்பக் கல்லூரிகளில் முகாமைத் தகவல் முறைமையை நடைமுறைப்படுத்தல்.
  • முறைமைசாராப் பயிற்சியைப் பெற்றுள்ள, ஆனால் தேர்ச்சி உள்ள நுட்பர்களின் தேர்ச்சிகளை அளந்து தேர்ச்சிச் சான்றிதழை வழங்குவதற்கு (RPL System) உரிய நிறுவகத்திற்கு வழிப்படுத்தல்.